Friday, January 9, 2015

மனைவி கன்னித்தன்மையுடன் இல்லையென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நபர்..

தனது புது­ம­னைவி கன்­னித்­தன்­மை­யுடன் இல்­லை­யெனக் கூறி அப்­பெண்­ணுக்கும் அப்­பெண்ணின் தந்­தைக்கும் எதி­ராக பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்த சம்­பவம் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் இடம்­பெற்­றுள்­ளது.

வளை­குடா பிராந்­தி­யத்தின் மற்­றொரு நாட்டைச் சேர்ந்த இந்­நபர், ஆசிய நாடொன்றை சேர்ந்த பெண்­ணொ­ரு­வரை திரு­மணம் செய்­துள்ளார் எனத் தெரி­விக்­கப்­படு­கி­றது.

இத்­தம்­ப­தி­யினர் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் தேனி­ல­வுக்குச் சென்­றி­ருந்த நிலையில் தனது மனைவி கன்னித் தன்­மை­யுடன் இல்லை எனக் கூறி ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் புஜைராஹ் நக­ரி­லுள்ள பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

முறைப்­பாட்­டா­ள­ரான கணவர் 50 வயதைக் கடந்­தவர் எனவும் அவரின் மனைவி 20 வய­துக்கு குறைந்­தவர் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அப்பெண் கன்­னித்­தன்­மை­யுடன் உள்ளார் எனக் கருதி தான் திரு­மணம் செய்­த­தா­கவும், அப்­பெண்­ணுக்கு மஹர் கொடுப்­ப­ன­வாக 80,000 திர்­ஹாம்­களை (சுமார் 28 லட்சம் ரூபா) வழங்­கி­ய­தாவும் அந்நபர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment